Wednesday, November 20, 2013

வந்துட்டோம்ல..




"கடவுள் பாதி மிருகம் பாதி" - இது கமல்ஹாசன் சொன்னது. "காமெடி பாதி, கலக்கல் பாதி" இது நாங்க சொல்றது. ஒருத்தரா இருந்தாலும் பலபேரா இருந்தாலும் எங்கள நாங்க "நாங்க"ன்னு தான் சொல்லிக்குவோம். கணேஷ் வசந்த் ன்னு பேர பார்த்ததும் கண்டு பிடிச்சிருப்பீங்களே, நாங்களும் சுஜாதா சார் மாதிரி கதை எழுத போறோம்னு.. அப்படி நினைச்சிருந்தா அது ரொம்ப தப்பு.. கதை எழுதற அளவுக்கு நாங்க அவ்வளவு பெரிய அப்பாடக்கர் எல்லாம் கிடையாது.  அதான் ஏகப்பட்ட பதிவர்கள் கதை எழுதி குவிச்சுகிட்டு இருக்காங்களே.. சரி நாங்க என்ன எழுதப் போறோம்னு கேக்கறீங்களா.. ஒ ஒண்ணுமே கேக்கலையா.. சரி நீங்க கேட்டாலும் கேக்காட்டியும் நாங்க அத சொல்லப் போறதில்ல.. எழுதும்போது படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

 எங்க பீட்டர தாங்க முடியாம எழுந்து ஒடரீங்களா. கொஞ்சம் நில்லுங்க ராசா.. பீட்டர்ன்னதும் தான் நினைவுக்கு வருது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அப்படின்னு ஒரு ஊர் எங்க ஏரியாவுக்கு பக்கத்துல.. இல்ல இல்ல கொஞ்சம் தூரத்துல இருக்கு. அந்த ஊர்ல பீட்டர் அப்படீங்கற பேர்ல ஒருத்தன் கூட இல்லையாம். இதுக்கும் அந்த ஊர்ல தொண்ணூறு சதம் கிறிஸ்துவர்கள் தானாம். அந்த ஊர்ல ஏன் ஒரு பீட்டர் கூட இல்லேன்னு தெரிஞ்சுக்கணும்னா கடைசி பாரா வரைக்கும் நீங்க படிக்கணும். ஹஹஹா.. எப்புடி..

சரி, நாங்க ஏன் எழுத வரணும் அப்படின்னு நீங்க யோசிக்கலாம். சரி சரி, இதுவரைக்கும் யோசிக்கலேன்னா பரவாயில்லே இப்போ யோசிங்க. மேட்டரே இல்லாம பதிவுகள் எழுதற ஆசாமிகளையும், மேட்டர் நிறைய வச்சிக்கிட்டு எழுத தெரியாம கிறுக்கிக்கிட்டு இருக்கிற எழுத்தாளர்களையும் தாள முடியாம தான் நான் சாரி நாங்க பதிவெழுத வந்திருக்கோம்.. அதென்ன கணேஷ் வசந்த்.. நாங்க ஒரே ஆள் தான்னாலும் எங்களுக்குள்ள பொறுப்பா, கண்ணியமா, கடமை உணர்வோட ஒரு கணேஷும், சுதந்திரமா, கையில பாட்டிலோட, பிகர்களை ரூட் விடற ஒரு வசந்தும் ஒளிஞ்சு கிட்டு இருக்காங்க.. அவங்க ரெண்டு பேரும் மாறிமாறி உங்களுக்கு கதை சொல்லப் போறாங்க சாரி கதைன்னா கதை இல்ல சிலபல விஷயங்கள்.. கேக்க நீங்க ரெடியா?

நாங்க புதுசுங்கிறதால இப்போ உங்க டூட்டி என்ன தெரியுமா, உங்க பிளாக்கிலையோ, பேஸ்புக்கிலையோ எங்கள அறிமுகப் படுத்தி வைக்கறீங்க.. யார்னே தெரியாம எப்படி அறிமுகப் படுத்தறதா? என்ன நைனா இப்படி சொல்றே.. பாலச்சந்தர் இப்படி யோசிச்சிருந்தா தமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டாரோ, ஆல்பர்ட் பிராக்கோலி நினைச்சிருந்தா ஒரு ஷான் கானரி கிடைச்சிருப்பாரா.. இல்லே நம்ம அச்ரேகர் நினைச்சிருந்தா ஒரு சச்சின் தான் கிடைச்சிருப்பாரா.. ஒசிங்க மக்களே ஒசிங்க.. அப்படியே ஒசிச்சுட்டே சேர்  பண்ணிடுங்க..சரியா..

சரி கடைசி பத்திக்கு வந்தாச்சு.. அப்புறம் நாங்க கிளம்புறோம் வர்ட்டா.. ஒக்கே ஒக்கே ஒக்கே, பீட்டர் பத்தி விஷயம் பாக்கி இருக்குதில்ல.. நாங்க என்ன சொன்னோம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ங்கற ஊருல பீட்டர்ங்கிற பேருல யாருமே இல்லைன்னு தானே சொன்னோம்.. நாங்க சொல்ற எல்லாத்தையும் அப்படியே நம்பிடறதா? கோயில் இல்லாத ஊர் கூட இருக்கும். பீட்டர் இல்லாத ஊர் இருக்கா.. தெரிஞ்சா நீங்களே சொல்லுங்களேன்!